அனைவருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே!
நான் மேலே வாழ்த்தியது நம் ஆசான் வள்ளுவரின்
பிறந்தநாளை தொடர்ந்து ஆரம்பமான திருவள்ளுவர் ஆண்டான 2044 ஆம் ஆண்டு பிறந்தமைக்காக.
இதை நான் தமிழ் புத்தாண்டென்று கூறவில்லை ஆனால் இந்த ஆண்டு முறையை நம் தமிழர்கள் மறந்து
விட கூடாது என்பதே என் ஆதங்கம்.
ஒரு சிறிய கால இடைவேளைக்குப் பிறகு மீண்டும்
உங்களிடம் என் எண்ணங்களை பகிர்ந்துக்கொள்ள இந்த வலைப்பதிவை பயன்படுத்த விரும்புகிறேன்.
சரி இனி நாம் ஆசான் வள்ளுவர் தோன்றியதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முந்தய காலத்திற்கு
ஒரு வரலாற்றுப் பயணத்தை தொடங்குவோம்.
முந்தைய பதிவில் தமிழ் எழுத்துக்களின் தோற்றத்தைப்
பற்றி கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். இந்தப் பதிவில் திராவிடர்களின்
தோற்றத்தையும் மூலத்திராவிடமொழியிலிருந்து பிற திராவிட மொழிகள் பிறந்ததைப்பற்றிய சில
தகவல்களை கூற விரும்புகிறேன். தமிழின் இருண்ட காலம் எனக் கருதப்படும் அந்தக் காலத்தில்
தான் மூலத்திராவிடமொழியிலிருந்து தமிழ் மொழி பிரிந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து.
இந்த இருண்ட காலத்தில் தான் தொடக்கநிலை தமிழர்களாக இருந்த குமரி மாந்தர்கள் மூலத்திராவிட
மொழியைப்பேசும் திராவிட இனமாக மாறினார்கள். இந்த காலத்தை வரலாற்று ஆய்வாளர்கள் பழங்கற்காலம்
என வகுத்துள்ளனர். இந்த காலத்தில் மூலத்திராவிடமொழியிலிருந்து பிற திராவிட மொழிகள்
எப்படி பிறந்தது என்பதை காண்பதற்கு முன் பல மொழிகள் உருவாவதற்கான காரணத்தையும் அவசியத்தையும்
உற்று நோக்குவோம்.
ஆப்ரிக்காவில் தோன்றுகிறது
மனித இனம்:
இன்றைய ஆப்ரிக்க கண்டத்தில் சுமார்
500000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மனித இனம் பல்வேறு காரணங்களினால் தரணியெங்கும் பரவத்
தொடங்கினர். அவ்வாறு இடம் பெயர்ந்து குமரிகண்டத்தில் குடி புகுந்த அந்த இனத்தை தான்
குமரி மாந்தர்கள் எனவும் உலகின் முதல் தமிழர்கள் எனவும் நான் கூறி இருந்தேன். திராவிட
இனத்தைப் பற்றியும் திராவிட மொழியைப் பற்றியும் காண்பதற்கு முன் உங்களுக்கு ஒரு விடயத்தை
தெளிவு படுத்த விரும்புகிறேன். மனித இனம் பேசத்தொடங்கிய இடம்தான் குமரி கண்டமே தவிற
மனிதன் தோன்றியது ஆப்பிரிக்க கண்டத்தில் தான். இதுவே பரிணாம அறிவியலில் இருந்து நமக்கு
கிடைத்துள்ள தகவல்கள்.
சரி மூலதிராவிடமொழியிலிருந்து பிற திராவிடமொழிகள்
பிரிந்ததை பற்றி கூறுவதாக இருந்த இடத்தில் நான் ஏன் மீண்டும் பரிணாம வளர்ச்சியைப்பற்றி
பேசினேன் என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். அதற்கு பதில் காண வேண்டுமென்றால் நாம்
திராவிட மொழிகள் தோன்றிய காலம் எனக்கருதப்படும் பழங்கற்காலத்திற்க்கு தான் செல்லவேண்டும்.
இந்த பழங்கற்காலத்திற்கும் பரிணாம வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது என்பது மறுக்கமுடியாத
உண்மை. அந்த தொடர்பின் விளைவாக பிறந்தது தான் நம் திராவிட இனமாக இருக்கக்கூடும் என்பது
என் கருத்து.
பழங்கற்காலத்திற்கு
ஒரு வரலற்றுப்பயணம்:
இன்றிலிருந்து சுமார் 340000 ஆண்டுகளுக்கு
முன் நம் குமரி மாந்தன் பழங்கற்காலத்தில் அடி எடுத்து வைத்திருப்பான். ஆப்பிரிக்க கண்டத்தில்
அவதரித்த மனித இனம், தங்கள் மூளை வளர்ச்சியின் விளைவாக எல்லாதிசைகளிலும் பரவத்தொடங்கினர்.
இவ்வாறாக அன்றைய ஆப்பிரிக்காவிற்க்கு அருகிலிருந்த நம் குமரிகண்டத்திற்க்கு வந்த அவர்கள்
அங்கேயே தங்கள் இனத்தை வளர்த்தனர். ஆதி மனிதனின் மூளை அந்த காலத்தில் தான் அதிவேக வளர்ச்சி
அடைந்தது. இந்த காலத்தில் தான் குமரிமாந்தன் எழுதவும் ஆரம்பித்தான், எழுத்துக்களும்
பிறந்தது. அவனது மூளை வளர்ச்சியின் விளைவாகத்தான் பலுங்கி கற்கள், கூழாங்கற்கள், படிமக்கற்கள்
மற்றும் பாறைகளிலிருந்து ஆக்கப்பூர்வமான் கலன்களையும், கருவிகளையும் உருவாக்கத் தொடங்கினான்.
இந்தக் காலத்தை தான் வரலாற்று ஆய்வாளர்கள் பழங்கற்காலம் என்கிறார்கள்.
மொழி ரீதியாக பார்த்தால் குமரிமாந்தன் இந்த
கற்காலத்தில் மூலத்திராவிடமொழியை பேசிக்கொண்டிருந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. மானுடவியல்
ஆய்வாளர்கள் உலகளவிலான மானுட சமூகத்தை நான்கு பிரிவுகளாக பிரித்துள்ளனர்.
· திராவிட
இனம்
· ஆப்ரிக்க
இனம்
· ஐரோப்பிய
இனம்
· மங்கோலிய
இனம்
இதில் பழங்கற்காலத்தில் குமரிகண்டத்தில்
மூலத்திராவிடமொழியைப் பேசிய அந்த இனத்தை தான் அவர்கள் திராவிட இனமாக வகுத்துள்ளனர்.
இந்த காலத்தை ஆய்வாளர்கள் “லெவலோசியன்” (Levalociyan) என்பர். மூலத்திராவிடமொழியைப் பேசிய இந்த
திராவிடர்களின் அறிவு வளர வளர அவர்கள் பயன்படுத்திய கருவிகள் மட்டும் சீராகவில்லை அவர்களின்
மொழியின் உச்சரிப்பும் சீரானது. வாசகர்களே! இனி நான் குமரிமாந்தர்கள் என்று குறிப்பிடுவதை
நிறுத்திவிட்டு திராவிடர்கள் என்றே நம் மூதாதேயர்களை குறிப்பிடுவேன். எனவே குழப்பம்
வேண்டாம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6QmnqvHddquDD1MgrUID1DiXweuDIg8NV9JYKFx3sUqF4KwvqDTVkZM5wjyVmyh26YWkpA0G4eIzKKV2A0aQQLM9dmHb3lA0md0l5c0F0hwhZ8RuAsYTNvx0gchnT8t7_ay9H6f1OtPU/s1600/s.jpg)
கற்காலத்தின் சித்திர வடிவ
மூலத்திராவிட எழுத்துக்கள்.
திராவிட இனம்:
இந்த நான்கு பிரிவுகளில் நாம் திராவிட இனத்தை
மட்டும் கருத்தில் கொள்ளுவோம். நான் முதலிலே மூலத்திராவிட மொழியிலிருந்து தமிழ் மற்றும்
பிற திராவிட மொழிகள் பிரிந்தது பழங்கற்காலம் எனவும் அதற்கான வரலாற்று சான்றுகள் ஏதும்
சரிவர இல்லை எனவும் கூறி இருந்தேன். ஆனால் மற்ற திராவிட மொழிகளை அந்த மூலத்திராவிடமொழி
பெற்றெடுத்தது எப்படி என்பதற்கு சில யூகங்கள் உள்ளன. கற்காலத்தில் திராவிடன் இருந்தபோது
அவன் மூலத்திராவிடமொழியை தவிற வேறு மொழியை பேசவேண்டிய அவசியம் இருந்திருக்காது. அவனது
மூளை வளர வளர அவனுக்கு உலகை பற்றிய ஆர்வமும் அதை பற்றி ஆராயவேண்டும் என்ற உந்துதலும்
ஏற்பட்டது. இந்த எண்ணங்களின் விளைவாக அவன் உலகின் எல்லா திசைகளிலும் பரவ தொடங்கினான்.
அதாவது திராவிடர்கள் குமரி கண்டத்திலிருந்து இந்தியா முழுவதும் அல்லது ஆசியா முழுவதுமே
பரவினர் என்று கூறலாம்.
இவ்வாறாக அவர்கள் பரவியபோது அவர்கள் குழுக்களாக
தான் வாழ்ந்தனர். இந்த திராவிட இனக்குழுக்கள் பரவும் போது அவர்கள் தங்களுடன் மனிதர்களை
மட்டும் அழைத்து செல்லவில்லை, மாறாக அவர்களின் அறிவு, மொழி, கலை மற்றும் ஏனைய கலாச்சார
முக்கியத்துவம் வாய்ந்த தகுதிகளையும் கொண்டு சென்றனர். இந்த இனக்குழுக்கள் அனைத்திற்கும்
மூலதிராவிடமொழிதான் பிரதான மொழியாக இருந்தது. ஆனால் காலத்தின் விந்தையாக அவர்கள் அந்த
மூலத்திராவிடமொழியை அவர்களின் வாழ்விடங்களின் தன்மைக்கேற்ப மாற்றிக்கொண்டனர் அல்லது
திருத்திக்கொண்டனர். அதாவது இன்றும் குளிர் தேசங்களுக்கு சென்றால் நம் உதட்டு உச்சரிப்பு
சற்று மந்தமாக இருப்பதைப்போலே அன்றும் அந்த தொடக்கநிலை மனிதர்கள் தங்கள் மொழியை இடத்திற்கேற்ப
வடிவமைத்தனர் என்கிறது ஆய்வு.
திராவிடமொழிக்குடும்பம்:
இப்படி இந்திய துணைக் கண்டம் முழுவதும் பரவிய
திராவிடர்கள் அவர்களின் மொழியையும் நாகரீகத்தையும் வளர்த்தனர். இதுவே உலகின் மிகப்
பழமையான சிந்து சமவெளி, மொகஞ்ச தாரோ போன்ற நாகரீகங்கள் எனும் கருத்தும் நிலவுகிறது.
இந்த நாகரீங்களின் வரலாற்றையும் அவற்றுக்கும் தமிழுக்கும் உள்ள உறவையும் மற்றொரு பதிவில்
மிக விரிவாக கூறுகிறேன். இவ்வாறு ஆசியா முழுவதும் பரவிய திராவிட இனம் பல திராவிட மொழிகளையும்
ஈன்றெடுத்தது. இந்த திராவிட மொழிகள் தான் இன்றும் தென் இந்தியாவை ஆண்டுக்கொண்டு இருக்கிறது.
இவ்வாறாக திராவிடத்தின் தாயாக விளங்கிய மூலத்திராவிட மொழியின் குழந்தைகள் பல. அவற்றில்
மூத்த குழந்தையின் வாயிலாக தான் நான் இந்த பதிவை பதித்துக்கொண்டிருக்கிறேன். ஆம் நம்
தாய் தமிழைத்தான் கூறினேன்.
இந்த அனைத்து வரலாற்று நிகழ்வுகளும் நிகழ்ந்த
காலம் இன்னும் சரியாக வகுக்கப்படாமல் தான் உள்ளது. மூலத்திராவிடமொழியிலிருந்து திராவிடம்
பிறந்ததைப்பற்றி மேலே குறிப்பிட்டுவிட்டேன். இன்னும் தமிழின் அதிகாரப்பூர்வமான தோற்றத்தைப்பற்றி
நான் கூறவில்லையே. திராவிடமொழி குடும்பம் மிகப்பெரியது. அதைப்பற்றி ஒரே நாளில் பேசி
முடித்துவிட்டால் நம் திராவிட முன்னோர்கள் என்னை மன்னிக்க மாட்டனர்.
ஆம் திராவிடமொழிகளின் வகைகளையும், அவற்றில்
இன்று வழக்கில் இருப்பவைகளையும், திராவிடத்திலிருந்து தமிழின் தோற்றத்தையும், தமிழின்
சகோதர திராவிட மொழிகளை பற்றியும் அடுத்த பதிவில் கூறுகிறேன்.
நன்றி:
- http://www.tamilvalluvam.org/KuralArticalPage.asp?Id=12
- http://venkadesh1987.wordpress.com/2010/08/27/tamil-new-year/
- http://kaniyatamil.com/history.htm
- http://en.wikipedia.org/wiki/Stone_Age
- http://www.dailymail.co.uk/sciencetech/article-1377150/Every-language-evolved-single-prehistoric-mother-tongue-spoken-Africa.html
- http://www.san.beck.org/EC2-Prehistoric.html
- http://www.burlingtonnews.net/leumurian1.html
- http://en.wikipedia.org/wiki/Early_human_migrations
- http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே!
நான் மேலே வாழ்த்தியது நம் ஆசான் வள்ளுவரின்
பிறந்தநாளை தொடர்ந்து ஆரம்பமான திருவள்ளுவர் ஆண்டான 2044 ஆம் ஆண்டு பிறந்தமைக்காக.
இதை நான் தமிழ் புத்தாண்டென்று கூறவில்லை ஆனால் இந்த ஆண்டு முறையை நம் தமிழர்கள் மறந்து
விட கூடாது என்பதே என் ஆதங்கம்.
ஒரு சிறிய கால இடைவேளைக்குப் பிறகு மீண்டும்
உங்களிடம் என் எண்ணங்களை பகிர்ந்துக்கொள்ள இந்த வலைப்பதிவை பயன்படுத்த விரும்புகிறேன்.
சரி இனி நாம் ஆசான் வள்ளுவர் தோன்றியதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முந்தய காலத்திற்கு
ஒரு வரலாற்றுப் பயணத்தை தொடங்குவோம்.
முந்தைய பதிவில் தமிழ் எழுத்துக்களின் தோற்றத்தைப்
பற்றி கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். இந்தப் பதிவில் திராவிடர்களின்
தோற்றத்தையும் மூலத்திராவிடமொழியிலிருந்து பிற திராவிட மொழிகள் பிறந்ததைப்பற்றிய சில
தகவல்களை கூற விரும்புகிறேன். தமிழின் இருண்ட காலம் எனக் கருதப்படும் அந்தக் காலத்தில்
தான் மூலத்திராவிடமொழியிலிருந்து தமிழ் மொழி பிரிந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து.
இந்த இருண்ட காலத்தில் தான் தொடக்கநிலை தமிழர்களாக இருந்த குமரி மாந்தர்கள் மூலத்திராவிட
மொழியைப்பேசும் திராவிட இனமாக மாறினார்கள். இந்த காலத்தை வரலாற்று ஆய்வாளர்கள் பழங்கற்காலம்
என வகுத்துள்ளனர். இந்த காலத்தில் மூலத்திராவிடமொழியிலிருந்து பிற திராவிட மொழிகள்
எப்படி பிறந்தது என்பதை காண்பதற்கு முன் பல மொழிகள் உருவாவதற்கான காரணத்தையும் அவசியத்தையும்
உற்று நோக்குவோம்.
ஆப்ரிக்காவில் தோன்றுகிறது
மனித இனம்:
இன்றைய ஆப்ரிக்க கண்டத்தில் சுமார்
500000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மனித இனம் பல்வேறு காரணங்களினால் தரணியெங்கும் பரவத்
தொடங்கினர். அவ்வாறு இடம் பெயர்ந்து குமரிகண்டத்தில் குடி புகுந்த அந்த இனத்தை தான்
குமரி மாந்தர்கள் எனவும் உலகின் முதல் தமிழர்கள் எனவும் நான் கூறி இருந்தேன். திராவிட
இனத்தைப் பற்றியும் திராவிட மொழியைப் பற்றியும் காண்பதற்கு முன் உங்களுக்கு ஒரு விடயத்தை
தெளிவு படுத்த விரும்புகிறேன். மனித இனம் பேசத்தொடங்கிய இடம்தான் குமரி கண்டமே தவிற
மனிதன் தோன்றியது ஆப்பிரிக்க கண்டத்தில் தான். இதுவே பரிணாம அறிவியலில் இருந்து நமக்கு
கிடைத்துள்ள தகவல்கள்.
சரி மூலதிராவிடமொழியிலிருந்து பிற திராவிடமொழிகள்
பிரிந்ததை பற்றி கூறுவதாக இருந்த இடத்தில் நான் ஏன் மீண்டும் பரிணாம வளர்ச்சியைப்பற்றி
பேசினேன் என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். அதற்கு பதில் காண வேண்டுமென்றால் நாம்
திராவிட மொழிகள் தோன்றிய காலம் எனக்கருதப்படும் பழங்கற்காலத்திற்க்கு தான் செல்லவேண்டும்.
இந்த பழங்கற்காலத்திற்கும் பரிணாம வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது என்பது மறுக்கமுடியாத
உண்மை. அந்த தொடர்பின் விளைவாக பிறந்தது தான் நம் திராவிட இனமாக இருக்கக்கூடும் என்பது
என் கருத்து.
பழங்கற்காலத்திற்கு
ஒரு வரலற்றுப்பயணம்:
இன்றிலிருந்து சுமார் 340000 ஆண்டுகளுக்கு
முன் நம் குமரி மாந்தன் பழங்கற்காலத்தில் அடி எடுத்து வைத்திருப்பான். ஆப்பிரிக்க கண்டத்தில்
அவதரித்த மனித இனம், தங்கள் மூளை வளர்ச்சியின் விளைவாக எல்லாதிசைகளிலும் பரவத்தொடங்கினர்.
இவ்வாறாக அன்றைய ஆப்பிரிக்காவிற்க்கு அருகிலிருந்த நம் குமரிகண்டத்திற்க்கு வந்த அவர்கள்
அங்கேயே தங்கள் இனத்தை வளர்த்தனர். ஆதி மனிதனின் மூளை அந்த காலத்தில் தான் அதிவேக வளர்ச்சி
அடைந்தது. இந்த காலத்தில் தான் குமரிமாந்தன் எழுதவும் ஆரம்பித்தான், எழுத்துக்களும்
பிறந்தது. அவனது மூளை வளர்ச்சியின் விளைவாகத்தான் பலுங்கி கற்கள், கூழாங்கற்கள், படிமக்கற்கள்
மற்றும் பாறைகளிலிருந்து ஆக்கப்பூர்வமான் கலன்களையும், கருவிகளையும் உருவாக்கத் தொடங்கினான்.
இந்தக் காலத்தை தான் வரலாற்று ஆய்வாளர்கள் பழங்கற்காலம் என்கிறார்கள்.
மொழி ரீதியாக பார்த்தால் குமரிமாந்தன் இந்த
கற்காலத்தில் மூலத்திராவிடமொழியை பேசிக்கொண்டிருந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. மானுடவியல்
ஆய்வாளர்கள் உலகளவிலான மானுட சமூகத்தை நான்கு பிரிவுகளாக பிரித்துள்ளனர்.
· திராவிட
இனம்
· ஆப்ரிக்க
இனம்
· ஐரோப்பிய
இனம்
· மங்கோலிய
இனம்
இதில் பழங்கற்காலத்தில் குமரிகண்டத்தில்
மூலத்திராவிடமொழியைப் பேசிய அந்த இனத்தை தான் அவர்கள் திராவிட இனமாக வகுத்துள்ளனர்.
இந்த காலத்தை ஆய்வாளர்கள் “லெவலோசியன்” (Levalociyan) என்பர். மூலத்திராவிடமொழியைப் பேசிய இந்த
திராவிடர்களின் அறிவு வளர வளர அவர்கள் பயன்படுத்திய கருவிகள் மட்டும் சீராகவில்லை அவர்களின்
மொழியின் உச்சரிப்பும் சீரானது. வாசகர்களே! இனி நான் குமரிமாந்தர்கள் என்று குறிப்பிடுவதை
நிறுத்திவிட்டு திராவிடர்கள் என்றே நம் மூதாதேயர்களை குறிப்பிடுவேன். எனவே குழப்பம்
வேண்டாம்
![]() |
கற்காலத்தின் சித்திர வடிவ மூலத்திராவிட எழுத்துக்கள். |
திராவிட இனம்:
இந்த நான்கு பிரிவுகளில் நாம் திராவிட இனத்தை
மட்டும் கருத்தில் கொள்ளுவோம். நான் முதலிலே மூலத்திராவிட மொழியிலிருந்து தமிழ் மற்றும்
பிற திராவிட மொழிகள் பிரிந்தது பழங்கற்காலம் எனவும் அதற்கான வரலாற்று சான்றுகள் ஏதும்
சரிவர இல்லை எனவும் கூறி இருந்தேன். ஆனால் மற்ற திராவிட மொழிகளை அந்த மூலத்திராவிடமொழி
பெற்றெடுத்தது எப்படி என்பதற்கு சில யூகங்கள் உள்ளன. கற்காலத்தில் திராவிடன் இருந்தபோது
அவன் மூலத்திராவிடமொழியை தவிற வேறு மொழியை பேசவேண்டிய அவசியம் இருந்திருக்காது. அவனது
மூளை வளர வளர அவனுக்கு உலகை பற்றிய ஆர்வமும் அதை பற்றி ஆராயவேண்டும் என்ற உந்துதலும்
ஏற்பட்டது. இந்த எண்ணங்களின் விளைவாக அவன் உலகின் எல்லா திசைகளிலும் பரவ தொடங்கினான்.
அதாவது திராவிடர்கள் குமரி கண்டத்திலிருந்து இந்தியா முழுவதும் அல்லது ஆசியா முழுவதுமே
பரவினர் என்று கூறலாம்.
இவ்வாறாக அவர்கள் பரவியபோது அவர்கள் குழுக்களாக
தான் வாழ்ந்தனர். இந்த திராவிட இனக்குழுக்கள் பரவும் போது அவர்கள் தங்களுடன் மனிதர்களை
மட்டும் அழைத்து செல்லவில்லை, மாறாக அவர்களின் அறிவு, மொழி, கலை மற்றும் ஏனைய கலாச்சார
முக்கியத்துவம் வாய்ந்த தகுதிகளையும் கொண்டு சென்றனர். இந்த இனக்குழுக்கள் அனைத்திற்கும்
மூலதிராவிடமொழிதான் பிரதான மொழியாக இருந்தது. ஆனால் காலத்தின் விந்தையாக அவர்கள் அந்த
மூலத்திராவிடமொழியை அவர்களின் வாழ்விடங்களின் தன்மைக்கேற்ப மாற்றிக்கொண்டனர் அல்லது
திருத்திக்கொண்டனர். அதாவது இன்றும் குளிர் தேசங்களுக்கு சென்றால் நம் உதட்டு உச்சரிப்பு
சற்று மந்தமாக இருப்பதைப்போலே அன்றும் அந்த தொடக்கநிலை மனிதர்கள் தங்கள் மொழியை இடத்திற்கேற்ப
வடிவமைத்தனர் என்கிறது ஆய்வு.
திராவிடமொழிக்குடும்பம்:
இப்படி இந்திய துணைக் கண்டம் முழுவதும் பரவிய
திராவிடர்கள் அவர்களின் மொழியையும் நாகரீகத்தையும் வளர்த்தனர். இதுவே உலகின் மிகப்
பழமையான சிந்து சமவெளி, மொகஞ்ச தாரோ போன்ற நாகரீகங்கள் எனும் கருத்தும் நிலவுகிறது.
இந்த நாகரீங்களின் வரலாற்றையும் அவற்றுக்கும் தமிழுக்கும் உள்ள உறவையும் மற்றொரு பதிவில்
மிக விரிவாக கூறுகிறேன். இவ்வாறு ஆசியா முழுவதும் பரவிய திராவிட இனம் பல திராவிட மொழிகளையும்
ஈன்றெடுத்தது. இந்த திராவிட மொழிகள் தான் இன்றும் தென் இந்தியாவை ஆண்டுக்கொண்டு இருக்கிறது.
இவ்வாறாக திராவிடத்தின் தாயாக விளங்கிய மூலத்திராவிட மொழியின் குழந்தைகள் பல. அவற்றில்
மூத்த குழந்தையின் வாயிலாக தான் நான் இந்த பதிவை பதித்துக்கொண்டிருக்கிறேன். ஆம் நம்
தாய் தமிழைத்தான் கூறினேன்.
இந்த அனைத்து வரலாற்று நிகழ்வுகளும் நிகழ்ந்த
காலம் இன்னும் சரியாக வகுக்கப்படாமல் தான் உள்ளது. மூலத்திராவிடமொழியிலிருந்து திராவிடம்
பிறந்ததைப்பற்றி மேலே குறிப்பிட்டுவிட்டேன். இன்னும் தமிழின் அதிகாரப்பூர்வமான தோற்றத்தைப்பற்றி
நான் கூறவில்லையே. திராவிடமொழி குடும்பம் மிகப்பெரியது. அதைப்பற்றி ஒரே நாளில் பேசி
முடித்துவிட்டால் நம் திராவிட முன்னோர்கள் என்னை மன்னிக்க மாட்டனர்.
ஆம் திராவிடமொழிகளின் வகைகளையும், அவற்றில்
இன்று வழக்கில் இருப்பவைகளையும், திராவிடத்திலிருந்து தமிழின் தோற்றத்தையும், தமிழின்
சகோதர திராவிட மொழிகளை பற்றியும் அடுத்த பதிவில் கூறுகிறேன்.
No comments:
Post a Comment