வணக்கம்!!
அனைவரையும்
போல ஒரு சராசரி
வாழ்க்கையை
வாழும் இந்த சிறுவனின்
ஒரு விநோதமான முயற்சியே
இந்த படைப்பு. நான் இங்கு எதுவும் புதிதாக பதித்துவிட போவதில்லை. நம் அனைவருக்கும்
தெரிந்திருக்கவேண்டிய நம் வரலாற்றின் சிறப்புகளை நமக்கே நினைவூட்டும் ஒரு முயற்சியே
இது. இங்கு இருக்கும் பெரும்பாலான தகவல்கள், பலருடைய ஆய்வுகளின் விளைவுகளேயாகும். அப்படிபட்ட
தகவல்களின் மூலத்தை (source) நான் இறுதியில் குறிப்பிட்டுள்ளேன்
குமரியின் மைந்தன் என்பவன்
நானோ நீங்களோ அல்லது
எந்த ஒரு தனி
மனிதனோ அல்ல. பரந்த
இந்த உலகில் தமிழ்
என்ற ஒரு ஒப்பற்ற
மொழியை பேசவும், எழுதவும்,
படிக்கவும்
தெரிந்த ஒவ்வொரு உயிரும்
குமரியின் மைந்தரே!
குமரி என்பது ஒரு
பெயர் மட்டுமல்ல, அது
ஒரு நாகரீகம். நாம்
கற்பனை கூட செய்து
பார்க்க முடியாத காலத்திலேயே
நம் மூதாதயர்கள் உலகின்
மிக வியக்கதக்க நாகரீகத்தை
வகுத்துள்ளார்கள்
என்றால் உங்களால் நம்ப
முடிகிறதா?
இன்னும் குமரியின் (இலெமூரியா)
சரியான காலம் வகுக்கப்படவில்லை.
ஆனால் தற்போதைய ஆய்வின்
படி குமரியின் வயது
சுமார் 5,02,000 ஆண்டுகள். இது
அந்த நிலபரப்பின் வயது
மட்டுமல்ல, நம் தாய்மொழியான
தமிழின் உத்தேசமான வயது.
அந்த அளவுக்கு பெருமைவாய்ந்த
நம் மொழியின் வரலாறு
நம்மில் எத்தனை பேருக்குத்தெரியும்??
சரி, முதலில் குமரியின்
வரலாற்றை சற்று உற்று
நோக்குவோம்.
![]() |
கடலுக்கடியில் இலமூரியா ( குமரி கண்டம்) மூழ்கி இருப்பதை காட்டும் வரைபடம் |
ஒரு காலத்தில் சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது என்கிறார், அறிஞர் ஓல்டுகாம் அவர்கள்.
![]() |
இலமுர் இனக்குரங்கு |
பேரறிஞர் திரு. கட்டு எலியட் என்பவர் தாம் எழுதிய “மறைந்த இலமுரியா” (Lost Lemuria) என்ற நூலில் காட்டியுள்ள நில வரைபடத்தில் ஒரு பெரிய மலைத் தொடர் மேடைக்கடலில் தொடங்கித் தென் வடக்காகக் குமரிமுனை வரை சென்று பின்பு தென் மேற்காகத் திரும்பி மடகாசுக்கர் என்னும் ஆப்பிரிக்கத் தீவு வரை சென்றது எனச் சுட்டிக் காட்டுகிறார் என பேராசிரியர் திரு. கா. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் கூறுகின்றார்.
ஆஸ்திரேலியா,சாலித்தீவையும், தென்னாப்பிரிக்காவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்த நாடே “குமரி கண்டம்” என்கிறார் திரு. தேவநேயப்பாவாணர். இக்கண்டத்தில் தோன்றியவன் தான் “மாந்தன்” இவனை குமரிமாந்தன் என்பர். இவனுடைய நிலை மொழியற்ற ஊமையர் நிலை தோரா. கிமு.500000-100000 வரையாகும்.
![]() |
குமரியின் எல்லைகள் |
குமரிமாந்தரின் மொழியற்ற நிலை“சைகை மொழி”(Sign language).
குமரி நாட்டு மாந்தன், முற்காலகட்டத்தில் ஆடையின்றி விலங்குகளைப் போல் தன் இச்சைகளைப் பெற்று வந்தான். மனவுறமுமின்றி, மொழியுணர்ச்சியுமின்றி, உணர்ச்சியொலிகளையும், விளியொலிகளையும் கையாளத் தொடங்கினான். காலப் போக்கில் தன் கருத்துக்களைச் சைகைகளாலேயே வெளிப்படுத்தி வந்தான். (Gesture Language or Sign
Language) இதை ஊமையர் மொழி என்றே கூறலாம்.
இயற்கை மொழி தோரா. கி.மு.1,00,000 – 5,00,000
எழுத்தும், உச்சரிப்பும் சொற் பொருத்தமும் இல்லாமல் இயல்பாகப் பேசப்படும் ஒலித்தொகுதி (Natural
Language) இயற்கை மொழியாம், இம்மொழியை “முழைத்தல் மொழி” (Gesture Language – or Sign
Language) என்கிறோம். இம்மொழியின் ஒலிகள் 8 வகைப்படும். அவை
1. உணர்ச்சியொலிகள் (Emotional
Sounds)இன்ப துன்ப உணர்வை வெளியிடும் ஒலிகள்.
2. விளியொலிகள் (Vocative
Sounds) பிறரைவிளித்தல், அழைத்தல், கூப்பிடிதல் போன்றவைகள்.
3. ஒப்பொலிகள் (Imitative
Sounds)இரு திணைப் பொருளுரைக்கும் ஒலிகள்.
4.குறிப்பொலிகள் (Symbolic
Sounds) வழக்கப்படிகருத்துக்களைத் தெரிவிக்கும் ஒலிகள்.
5. வாய்ச் செய்கையொலிகள்வாயினாற் செய்யும் செய்கைகளும் செயல்களும்.
6. குழவி வளர்ப்பொலிகள் (Nursery
Sounds)குழந்தைப் பருவத்தினருக்குப் பொருந்தும் ஒலிகள்.
7. சுட்டொலிகள் (Decitive
Sounds)சுட்டிக் காட்டும் ஒலிகள் சுட்டொலிகள், மற்றும்.
8. வினாவொலிகள் என்பவைகளும் உண்டு,அவை ஐயம், சந்தேகம் மற்றும் வினாக்களைஎழுப்பும் ஒலிகள் எனப்படும்.
சரி இப்போது இதற்கும் தமிழ்மொழியின் தோற்றத்திற்கும்
ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?????
இந்த கேள்விக்கான பதிலையும் இந்த தகவல்களின்
மூலத்தையும் அடுத்த பதிவில் கூறுகிறேன்……..
nice
ReplyDeleteநன்றி நண்பா! படித்ததை பலருடன் பகிர்ந்துக்கொள்...
Deleteநல்ல சேகரிப்பு. பாராட்டுக்கள். இந்த பண உலகில் இதற்கெல்லாம் நேரம் ஒதுக்கி ....... வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன்,
கோவி.ரவி, கரூர்.
nallah pathippu...where did you get all the references for this post?
ReplyDelete