Tuesday 9 April 2013

பதிப்பு ௬(6) - தமிழின் குழந்தைப்பருவம் - கற்காலம் கடந்த வரலாற்று பயணம்!


வணக்கம்


சென்ற பதிவில் திராவிடமொழிக்குடும்பத்தின் தோன்றலைப் பற்றிய சில கருத்துக்களை கூறியிருந்தேன். இந்தப்பதிவில் மூலத்திராவிட மொழியிலிருந்து தமிழ் பிரித்ததாகக் கூறப்படும் காலத்தையும், அதற்கு துணை நிற்கும் கருத்துக்களையும், நம் தமிழ்மொழியின் குழந்தைப்பருவமாக கருதப்படும் ஆரம்பகால நிலையையும் சற்று ஆராய்வோம்.

வரலாற்று காலவரிசை:

நான் இதற்குமுன் கூறிய மொழிரீதியான நிகழ்வுகள் நடந்ததாக கருதப்படும் காலம் பழங்கற்காலத்தில் (Paleolithic) துவங்கி புதியகற்காலத்தை (Neolithic) கடந்து வெண்கல யுகம் (Bronze age) வரையிலானகாலம் ஆகும். இன்றிலிருந்து சுமார் 3400000 (34 லட்சம்) ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்து இறுதி பணிக்காலம் எனக்கருதப்படும் கி.மு 10000 வரை பழங்கற்காலமும் அதை தொடர்ந்து கிமு 3000 வரை புதிய கற்காலமும், கிமு 3000 முதல் 1250 வரை வெண்கல யுகமும் நிகழ்ந்தாக ஆய்வுகளின் மூலம் நம்மால் அறிய முடிகிறது.

மனிதனின் பரிணாமத்தை சித்தரிக்கும் காலவரிசை
இதில் நாம் பழங்கற்காலத்தைப்பற்றி முந்தய பதிவுகளில் பார்த்துவிட்டோம். மேலும் திராவிட மொழிகளின் பாகுபாட்டை அடிப்படையாக வைத்து பார்த்தால் அந்த காலத்தில் மனிதன் மிகவும் ஆரம்பநிலையிலே தான் இருந்தான். அது மூலதிராவிடமொழி மட்டுமே வாழ்ந்த ஒரு தொடக்க நிலையே ஆகும். பரிணாம ரீதியாக பார்த்தாலும் இந்த காலம் மிகவும் துவக்கநிலைக்காலமே ஆகும். இன்றைய மனிதர்களாக கருதப்படும் Homo sapiens என்ற இனத்தை தவிர வேறு சில மனித இனங்களும் வாழ்ந்த காலமாகவே இந்த பழங்கற்காலம் கூறப்படுகிறது. ஆனால் தமிழ்மொழி தனியாக நிலைப்பெற்ற காலமாக புதிய கற்காலத்தின் இறுதியையும் வெண்கல யுகத்தையும் குறிப்பிட்டால் அது மிகை ஆகாது.


புதிய கற்காலத்தில் ஆதிமனிதனின் செயல்களை
சித்தரிக்கும் படம்
(புகைப்படம்: 
www.telegraph.co.uk )
புதிய கற்காலமும் பரிணாமமும்:

புதியகற்காலத்தை Neolithic Period என ஆய்வாளர்கள் வகுக்கின்றனர் (NEO- புதிய {NEW}, LITHOS- கல் {STONE} எனப்பொருள்படும்). தமிழும் திராவிட மொழிகளும் இந்த காலத்தில் அடைந்த பரிணாம வளர்ச்சியை கூறுவதற்கு முன் மனிதன் இந்த காலத்தில் அடைந்த பரிணாம வளர்ச்சியை அறிவியல் ரீதியாக சற்று அலசுவோம். மனிதன் அவன் வாழ்ந்த சமூகத்தின் விளைவாக அடைந்த இந்த பரிணாம வளர்ச்சியும் அவனின் மொழி வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தது. பழங்கற்காலத்தில் கற்கள் மற்றும் ஏனைய கருவிகளை உருவாக்கிய மனித இனம் ஒரு நாடோடி வாழ்க்கையையே வாழ்ந்தனர் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அவர்கள் புதிய கற்காலத்தில் அடியெடுத்து வைத்தபோது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் சிறு குழுக்களாக குடியேறி இருந்திருப்பார்கள் என்பது தருக்கம். இவ்வாறாக அவர்கள் வாழ்ந்த இடத்திற்கேற்ப தங்கள் மொழியை அதாவது மூலத்திராவிடமொழியை வடிவமைத்ததால் தான் திராவிடமொழிக்குடும்பம் பிறந்தது.


கற்கால்த்தில் மனிதன் விலங்குகளைப்
       பழக்குவதை காட்டும் ஓவியம்
புகைப்படம்:(history-world.org)



இந்த மொழி வடிவமைப்பை ஏற்படுத்த அவர்களை தூண்டியது அந்த காலத்து சுற்றுசூழல் மற்றும் தட்பவெட்ப சூழ்நிலைகள் மட்டும் இல்லை. அந்த காலத்தில் அவர்கள் அடைந்த பரிணாம வளர்ச்சியும் இந்த வடிவமைப்புக்கு மறைமுக உந்துதலாக விளங்கியது. இந்த காலத்தில் தான் மனிதனின் சிந்திக்கும் ஆற்றல் மிக வேகமாக வளர்ந்திருக்கக்கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன. இந்த காலத்தில் தான் மனிதன் விவசாயம், குடும்ப வாழ்க்கை, கூட்டுக்கலாச்சாரம், விலங்குகளை வீட்டுவேலைகளுக்குப் பழக்கல் போன்ற பல விடயங்களை முதலில் உலகிற்கு கொண்டு வந்தான் எனும் கருத்தும் நிலவுகிறது. இந்த காலத்தில் அவர்களின் அடிப்படை தேவைகலான உணவு, உடை மற்றும் இருப்பிடம் மீது மனிதர்கள் பெரிதும் அக்கறை காட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. இதற்கு அவர்கள் தேவைகளை நிர்வாகிக்க கற்றது, போட்டியாக வேறு மனித இனங்கள் இல்லாதது, அன்றாடப்பணிகளுக்கு விலங்குகளின் உதவி இருந்தது போன்ற பல காரணங்கள் இருந்தாதாக பரிணாம ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

புதிய கற்காலத்தில் மொழி வளர்ச்சி:



பரிணாம வளர்ச்சி இவ்வாறாக நிகழ்ந்த போது திராவிடர்கள் அவர்கள் மொழியின் மீது அக்கறைக்காட்ட நிறைய நேரம் கிடைத்திருக்கும். அதன் விளைவாகத்தான் பல திராவிட மொழிகள் பிறந்திருக்கக்கூடும் என்பது என் கருத்து. மூலத்திராவிட மொழியின் இத்தனை பிரிவுகளாக பிரிந்தது கண்டிப்பாக ஒரு நாளிலோ, வாரத்திலோ அல்லது மாதத்திலோ நடந்திருக்காது. இதுநாள் வரை வேட்டையாடி உண்டு வாழ்ந்து வந்த ஒரு காட்டுமிராண்டி மனித இனம் உலகிற்கு விவசாயத்தை கற்றுகொடுத்தது இந்த காலத்தில் தான். ஆனால் அது முறையாக சீர்பட்டு நடைமுறைக்கு வர பல்லாயிரம் ஆண்டுகள் ஆனது. இதைத்தான் பரிணாம அறிவியலாளர்கள்கற்கால புரட்சிஎங்கின்றனர். இதுபோல் தான் மூலத்திராவிடமொழியிலிருந்து தமிழ் மொழி பிரிவதற்கும் பல்லாயிரம் ஆண்டுகள் ஆனதாக கூறப்படுகிறது. ஆம் புதிய கற்காலத்தின் இறுதி நாட்களாக கருதப்படும் கி.மு 3000 வரையில் தனித்தமிழ் பிரிந்ததற்கு வரலாறுகள் இல்லை.

சரி பின் எப்போது தான் தமிழ் மொழி தனித்து நின்றது? என்ற கேள்வி இங்கே எழலாம். நான் மேல் குறிப்பிட்ட நிகழ்வுகள் அனைத்துமே மூலத்திராவிடமொழியோடு தரணியெங்கும் குடிபுகுந்த அத்துணை திராவிட இனங்களுக்குமே பொதுவானது தான். எனவே மூலத்திராவிட மொழியிலிருந்து தமிழ் மற்றும் பிற திராவிட மொழிகள் பிரிந்தது ஒரே நேரத்தில் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது அதாவது தென்னகத்தில் தமிழ் உருவாகிய அதே நேரத்தில் மத்திய நிலங்களில் மற்றொரு திராவிட மொழி பிறந்திருக்கும். எனவே தமிழைத்தவிர வேரொரு திராவிட மொழியின் வயது தமிழுடன் ஒத்து போனால் அதை நாம் மறுத்துவிட முடியாது. மூலத்திராவிடமொழி பிறதிராவிட மொழிகளாக பிரிந்த காலத்தில் அது ஒரு இடைநிலை மொழியாக விளங்கியதாக மொழியியல் மறுசீரமைப்பாளர்கள் கூறுகின்றனர். உதாரணத்திற்கு தமிழுக்கும் கன்னடத்திற்கும் வார்ப்புருவாக இருந்த மூலத்திராவிடத்தின் திருத்திய நிலையை மூலத்தமிழ்-கன்னடம் என்ற இணைப்பு மொழியாக வகுக்குகின்றனர். மூலத்திராவிடமொழி தமிழாக மாறுவதற்கு ஏற்ற அடுத்த நிலையாக இந்த இணைப்பு மொழிகள் வழக்கிலிருந்த காலத்தை குறிப்பிடுகின்றனர்.

தென்னகத்தில் தமிழின் ஆரம்ப நிலை:

இன்று வழக்கிலிருக்கும் திராவிட மொழிகளின் வயதையும் அதன் தொன்மையையும் அந்தந்த மொழியின் இணைப்பு மொழி மூலத்திராவிடமொழியிலிருந்து பிரிந்த காலத்தை வைத்து அளந்துவிடலாம். மூலத்திராவிடமொழி அதன் இணைப்பு மொழிகளை ஈன்றெடுத்த காலம் தான் புதிய கற்காலம். அந்த இணைப்பு மொழிகள் திராவிட மொழிகளை பெற்றெடுத்தது மகாபாரதம் நடந்ததாக கூறப்படும் வெண்கல யுகத்தில் தான். ஆம் புதிய கற்காலத்தை தொடர்ந்து திராவிடர்கள் அடியெடுத்து வைத்தது வெண்கல யுகத்தில் தான். இது கிமு 3000 முதல் கிமு 1250 வரை நடந்ததாக அகழ்வாய்வுகள் கூறுகின்றன.

வெண்கல யுகத்தில் உலோகத்தை பயன்படுத்தும் மனிதனின் சித்தரிப்பு
(புகைப்படம்: 
i.dailymail.co.uk )

தமிழின் குழந்தைப்பருவம் என்று இந்த காலத்தை நான் கூறுவேன். அதற்கு காரணம் அந்த காலத்தில் அதாவது கிமு மூன்றாயிரத்தில் கோதாவரி ஆற்றங்ரையில் மூலத்தமிழ்-கன்னடம் வழக்கில் இருந்ததற்கு மொழியியல் மறு சீரமைப்பு ஆய்வுகளின் சில முடிவுகள் சான்றாக நிற்கின்றன. ஆம் வேட்டையாடுதல், விவசாயம், உலோகவியல் சம்பந்தமான வார்த்தைகள் தென்னிந்தியாவில் கிமு மூவாயிரத்தில் வழக்கிலிருந்தாக மொழி மறுசீரமைப்பு ஆய்வுகள் கூறுகின்றன. இதே கிமு மூவாயிரத்தில் தான் திராவிடர்கள் சிந்து சமவெளி நாகரீகத்தையும் துவங்கினர். மேலும் இந்த காலத்தில் தான் திராவிடர்கள் உலோகத்தை பயன் படுத்த துவங்கினர் என்பதும் மறுக்க முடியாத கருத்து. இதை தொடர்ந்து கிமு இரண்டாயிரத்தில் மூலத்தமிழ் மொழி வழக்கில் இருந்ததாகவும் அந்த காலத்தில் அரசியல், வீரம், கட்டிடக்கலை மற்றும் பல கலைகள் வளர்ச்சி அடைந்திருக்கக்கூடும் என வரலாற்று ஆய்வாளர்கள் மொழி மறுசீரமைப்பு ஆய்வுகள் மூலம் கணிக்கின்றனர்.

கிமு 30ஆம் நூற்றாண்டு (கிமு3000) முதல் கிமு 10ஆம் நூற்றாண்டு (கிமு1000) வரையிலான இந்த வெண்கல யுகத்தில் தான் தென்னகத்தில் தமிழ் தனியாக உலா வரத்தொடங்கியது என்பது தான் இந்த பதிவின் மூலம் நான் ஆணித்தரமாக கூறவரும் கருத்து. அதிலும் குறிப்பாக கிமு 20ஆம் நூற்றாண்டு தமிழின் குழந்தைப்பருவத்தில் மிக முக்கியமான காலம். தமிழ் எனும் குழந்தை முதலில் எழுந்து நின்றது இந்த காலத்தில் தான் என்றால் பொருத்தமாக இருக்கும்.

இந்தப்பதிவில் தென் இந்தியாவில் தமிழின் ஆரம்ப கால நிலையை பார்த்துவிட்டோம் இனி வரும் பதிவுகளில் தமிழுக்கும் மூலத்திராவிடமொழிக்கும் உள்ள ஒற்றுமைகள், தமிழின் பெயர் காரணம், தமிழின் சகோதர திராவிடமொழிகள் மற்றும் தமிழின் இலக்கிய வளங்களைப்பற்றி காண்போம்.


என் குறிப்புதவிகளுக்கு நன்றி:



  1. http://www.telegraph.co.uk/science/science-news/6023724/Stone-Age-man-used-fire-to-make-tools-50000-years-earlier-than-we-scientists-thought.html
  2. http://cache2.allpostersimages.com/p/LRG/54/5404/6ZDXG00Z/posters/jackson-peter-stone-age-farming.jpg
  3. http://history-world.org/stoneage.jpg
  4. http://lh6.ggpht.com/gaianbotanicals/SP_1Xg8UA8I/AAAAAAAAAQY/-a4J2zWCQyY/Alex_Grey_visionary%20origin%20of%20language_thumb%5B1%5D.jpg?imgmax=800
  5. http://i.dailymail.co.uk/i/pix/2011/12/04/article-2069828-0F0CA62500000578-355_468x306.jpg
  6. First Farmers: The Origins of Agricultural Societies by Peter Bellwood, 2004
  7. http://www.gloriousindia.com/history/dravidians.html
  8.  Southworth 2005, pp. 249–250
  9. http://thirutamil.blogspot.in/2009/01/1.html
  10. http://en.wikipedia.org/wiki/User:Vadakkan/Kotturai
  11. https://docs.google.com/viewer?a=v&q=cache:u4rwpT4oaGoJ:www.leidykla.eu/fileadmin/Acta_Orienatalia_Vilnensia/8_1/173-177.pdf+&hl=en&gl=in&pid=bl&srcid=ADGEESiE2hDlKCXbjQyqfll0Dkyf5nX-9yy1k1ioWpSY8XUqjKaPLBzl1HBk9gB7X1bOhPkO3t3wfaH6mVQYRXLi1jo01_Fuyc9ND7R6mu6HCmJxETQiayBnWmMIOZ5M9CWkEjZakiDw&sig=AHIEtbTWDOxWBYrDzlZ-yNo5yHLPG_Y8QQ
  12. http://www.thevedicfoundation.org/bhartiya_history/mahabharat.htm
  13. Prehistoric cultural stage, or level of human development, characterized by the creation and use of stone tools.Robert A. Guisepi Date:2000




No comments:

Post a Comment